கோவை சரவணா செல்வரத்தினம் வணிக கடைக்கு சீல்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

saravana selvaratnam shop2 - 2026

கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தனம் வணிக கடைக்கு மாநகராட்சி உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்

கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் சரவணா செல்வரத்னம் ஆயத்த ஆடை வளாகத்திற்கு இன்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மொத்தம் ஐந்து தளம் கொண்ட இந்த கடையில் வாகன நிறுத்தத்திற்கு பயன்படுத்த வேண்டிய கீழ் தளத்தை குடோனாகவும் , கடைக்கு முன்னால் இருக்கின்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக கடை பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் நால்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

saravana selvaratnam shop - 2026

இது உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பானது எனக்கூறி உயர்நீதிமன்றம் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.