ஆர்.டி.ஜி.எஸ்.,ஸில் இனி 6 மணி வரை பணம் அனுப்பலாம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்

reserve bank of india - 2026

ஆர்டிஜிஎஸ்ஸில் இனி 6 மணி வரை பணம் அனுப்பலாம். ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனையை மாலை 6 மணி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

வங்கிகளில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆர்டிஜிஎஸ் எனப்படும் உடனடி பண பரிவர்த்தனை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை எண்ணிக்கை ரூ.1335 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஆர்டிஜிஎஸ் மூலம் மாலை 4.30 மணி வரை பணம் அனுப்ப இயலும்.

ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி 6 மணி வரை அனுப்பலாம் என்று ரிசர்வ் வங்கி கால நீட்டிப்பு செய்துள்ளது. இதையடுத்து இந்த முறையில் பணம் அனுப்புவது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.