அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவி ஏற்பு!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக., சார்பில் போட்டியிட்டு 9 பேர் வெற்றி பெற்றனர். திமுக., ,தரப்பில் 13 பேர் வெற்றி பெற்றனர்.

நேற்று திமுக., உறுப்பினர்கள் 13 பேர் எம்.எல்.ஏ.,க்களாகப் பதவி ஏற்ற நிலையில், இன்று அதிமுக., உறுப்பினர்கள் 9 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

அதிமுகவை சேர்ந்த
விளாத்திகுளம் -சின்னப்பன்
சாத்தூர் – ராஜவர்மன்
அரூர் – சம்பத்குமார்
நிலக்கோட்டை – தேன்மொழி
மானாமதுரை – நாகராஜன்
பாப்பிரெட்டிபட்டி – கோவிந்தசாமி
பரமக்குடி – சதன் பிரபாகரன்
சோளிங்கர் – சம்பத்
சூலூர் – கந்தசாமி ஆகிய அதிமுக., உறுப்பினர்கள் 9 பேரும் சபாநாயகர் அறையில், சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img