மோதிக்கு கூழாங்கல் அனுப்புவேன் என்றார் மம்தா! இனிப்பை ஊட்டி விட்டார் பிரணாப் முகர்ஜி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi pranab - 2026

மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோதிக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரும் குடியரசுத் தலைவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி ரசகுல்லா இனிப்பு ஊட்டி விட்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோதி மீண்டும் பிரதமராக நாளை பதவி ஏற்கிறார். அதற்கு முன், மகான்கள், மூத்த தலைவர்களின் ஆசிகளை நாடி அவர்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த வரிசையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குச் சென்றார் மோதி. அவரை வரவேற்ற பிரணாப் முகர்ஜி, அவருக்கு கோல்கத்தா இனிப்பினை வாயில் ஊட்டி விட்டு, வாழ்த்து தெரிவித்தார். இந்தப் புகைப்படத்தை பிரதமர் மோதி டிவிட்டரில் வெளியிட்டார்.

தனது டிவிட்டர் பதிவில் அந்தப் புகைப்படத்துடன் அவர் குறிப்பிட்டுள்ள கருத்தில்… பிரணாப் முகர்ஜி மிகச் சிறந்த ராஜதந்திரி. அவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் விஷயம். அவரது பொது அறிவும் வியூகங்களும் அபாரமானவை. அவரது ஆசியை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோதியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. கூடுதல் பலத்துடன் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதற்கு வாழ்த்துக்கள். அவரது எண்ணம் தொலைநோக்கு பார்வை ஆகியவை நிறைவேற வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி கோல்கத்தா இனிப்பை மோதிக்கு ஊட்டி விடும் அதே வேளையில், முன்னர் மம்தா பானர்ஜி கூறிய கருத்தை அந்த டிவிட்டர் பதிவுகளில் சிலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். கூழாங்கல்லும் சகதியும் மோதிக்கு அனுப்புவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனாலும் பிரணாப் முகர்ஜி போல் மேற்கு வங்கம் மோதிக்கு இனிப்பைத்தான் ஊட்டியிருக்கிறது என்று கருத்துகள் பகிரப் படுகின்றன!

1 thought on “மோதிக்கு கூழாங்கல் அனுப்புவேன் என்றார் மம்தா! இனிப்பை ஊட்டி விட்டார் பிரணாப் முகர்ஜி!”

  1. செல்வி மம்தா பானெர்ஜி திரு மோடிக்கு அனுப்புவதாக சொல்லி இருந்த அதே கூழாங்கல்லால் தன்னை அடித்துக்கொள்ள வேண்டும். சகதியை தன் மேல் பூசிக்கொள்ள வேண்டும். செய்வாரா? இந்த லட்சணத்தில் மம்தா, மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறாராம். மானம் ரோஷம் உள்ளவரானால் அங்கே போக்க கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.