ஜெகன் உள்ளே..! திருப்பதி கோவில் சேனலின் சேர்மன் வெளியே..!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

svbc chairman - 2026ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் எஸ்விபிசி சேர்மன் பதவியில் இருந்து, திரைப்பட இயக்குனர் கே ராகவேந்திர ராவ் ராஜினாமா செய்துள்ளார்! அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆலய செயல் அதிகாரிக்கும் அரசாங்கத்துக்கும் அனுப்பியுள்ளார்.

எஸ்விபிசி – ஸ்ரீவேங்கடேஸ்வரா பக்தி சேனலின் சேர்மனாக பதவி வகித்து வரும் ராகவேந்திர ராவ், வயது முதிர்வு காரணமாக பதவி விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். திருமலா திருப்பதி தேவஸ்தானம் டிடிடி நிர்வாகத்திற்கும் அலுவலர்களுக்கும் ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமியின் ஆசிகள் எப்போதும் இருக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்!

svbc chairman1 - 2026கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ராகவேந்திர ராவ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மனாக நியமிக்கப்பட்டார்! 2015 முதல் தேவஸ்தான தர்மகர்த்தாக்கள்  மண்டலியில் மெம்பராக இருந்துள்ளார். எஸ்விபிசி சேனலுக்கு இதற்கு முன் சேர்மனாக இருந்த நரசிம்ம ராவின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக அவரை நீக்கிவிட்டு 2018ல் ராகவேந்திரராவ் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

சேனல் டைரக்டராக பொறுப்பேற்று நடத்தி வந்த அவரை அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுரைக்கேற்ப டிடிடி சேனல் சேர்மனாக நியமித்தது.

ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்கப் போகும் பின்னணியில் ராகவேந்திர ராவ் ராஜினாமா செய்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது! ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தில் திருப்பதி ஆலய நிர்வாகம் சீர்கேடைச் சந்திக்கும் என்ற அச்சம் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடையே நிலவுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.