மோடியை நோக்கி திரும்பிச் செல்லுங்கள் என்று பொருள் படும் வகையில், கோ பேக் டூ மோடி என்று தனது தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கட்டளையிடும் வீடியோ க்ளிப்பிங் ஒன்று சமூகத் தளத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
மோடி எதிர்ப்பு அரசியல் செய்தால் தான் தமிழகத்தில் வாக்குகளைப் பெற முடியும் என்ற நிலையை உருவாக்க, திட்டமிட்டு திமுக., தனது அரசியல் இயந்திரங்களின் மூலம் ஒரு கட்டமைப்பை நிறுவியது. மக்களிடம் மோடி எதிர்ப்பு என்ற ஒன்றைச் சொல்லியே ஓட்டு கேட்பது என்பதற்காக, நாட்டின் பிரதமரை வில்லனாக சித்திரித்து அரசியல் செய்து வந்தது.
இதற்காக, தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன் விடுவது, டிவிட்டர் சமூகத் தளங்களில் கோபேக் மோடி என்று ட்ரெண்ட் செய்வது என ஆரம்ப கால அதே நாலாந்தர அரசியலை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், திமுக., தலைவராக தற்போதுள்ள மு.க.ஸ்டாலின், துண்டுச் சீட்டு ஸ்டாலின் என்று மக்களிடையே புகழ் பெறும் அளவுக்கு, துண்டுச்சீட்டில் எழுதி வைத்து, அதையும் தப்பும் தவறுமாகப் படித்து தமிழக மக்களை மகிழ்வித்து வருகிறார். அவருடைய உளறல் பேச்சுகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு, மக்களுக்கு நகைச்சுவை உணர்வு குன்றாமல் சமூக ஊடகவாசிகள் பார்த்துக் கொள்கிறார்கள்.
அத்தகைய நகைச்சுவைகளில் ஒன்றாக ஸ்டாலின், கோபேக் டூ மோடி என கட்டளையிடும் வீடியோ இப்போடு வைரலாகி வருகிறது.