மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்!

சற்றுமுன் திருச்சி
aranthangi nelkolmuthal nilayam - 2026

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூடைகள் போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்தது.

அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் விவசாயிகள் விற்பனை செய்த நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு சாலை ஒரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு பணம் கொடுத்த வாங்கிய நெல் மூடைகளும் விவசாயிகள் விற்க வைத்திருந்த நெல் மூடைகளும் அடங்கும்.

இந்நிலையில் அதிகாலையில் பெய்த மழை காரணமாக அடுக்கி வைத்திருந்த நெல் மூடைகள் நனைந்தது மேலும் கடந்த 20 நாட்களாகவே நெல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால் நெல் முளைத்தும் சில இடங்களில் கரையான் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது

எனவே பல லட்சம் மதிப்பிலான அரசுக்கு மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான நெல் மூடைகளை அரசு பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.