
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபால பட்டிணத்தில் 1300 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஆவுடையார்கோயில் அருகில் உள்ள கோபாலபட்டிணம் கடற்கரையில் பொது விநியோகத்திற்கு பயன்படும் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மீமிசல் சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் ஆய்வு செய்தார்.
அப்போது திருமயம் அருகில் உள்ள போசம்பட்டியை சேர்ந்த செல்வம்(40) ஒரு வாகனத்தில் 1300 கிலோ அரியை கடத்த முற்பட்டபோது அரிசியையும் வாகனத்தினையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.