
பீகாரில் மின்னல் தாக்கி 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். “மோசமான வானிலையில் கவனமாக இருங்கள். இடியுடன் கூடிய மழையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளைப் பின்பற்றவும்” என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் டுவீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.





