சீசன்லி ஃபுட்: பலா கொட்டை கத்திரிக்காய் கார குழம்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Jack nut eggplant broth
Jack nut eggplant broth

பலா கொட்டை கத்திரிக்காய் கார குழம்பு

தேவையான பொருட்கள்
பலா கொட்டை – 1 கப்
கத்திரிக்காய் – 2
புளி சாறு – 1/4 கப்
தாளிக்க
வெங்காயம் – 1
தக்காளி – 1
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, தண்ணீர், மஞ்சள் தூள், எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க
சின்ன வெங்காயம் – 6
வர மிளகாய் – 2
பூண்டு – 4
எண்ணெய் – 1 tsp
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லி தூள் – 1 Tbsp
பொட்டுகடலை – 1 tsp
தேங்காய் துருவல் – 1/4 கப்

செய்முறை
பலா கொட்டையை குறைந்தது 3 மணி நேரம் ஊறவைத்து தோலை உரிக்கவும்.
குக்கரில் உப்பு சேர்த்து 4 விசில் விடவும்.

எண்ணெய் காயவைத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுக்கவும், அடுப்பை அனைக்கும் முன் தேங்காய் சேர்த்து கிளறவும்.
ஆறிய பின்பு மைய அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு மசிந்தவுடன் கத்திரிக்காய், புளி சாறு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
வெந்தவுடன் அரைத்தவிழுது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் வேகவைத்த பலா கொட்டையை சேர்த்து, உப்பு , புளி சரிபார்த்து நன்கு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.