
தமிழ்நாடு முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம்,
ஐயா எனது பெயர் G. ஸ்ரீகாந்த் நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா உள்ளி கிராமத்தில் வசிக்கிறேன் ஐயா.
எங்கள் கிராமத்தில் பாலாற்று பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட சமூக காடு சிலரின் சுய தேவைகளுக்காகவும் மற்றும் சமூக விரோதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
அழிக்கப்பட்ட காட்டினை மீண்டும் அரசாங்க உதவியுடன் மீட்டெடுத்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மரக்கன்றுகளும் 5 முதல் 20 அடி வரை வளர்ந்து உள்ளன. இதுவரை அரசாங்கம் இதற்கென 15 லட்சம் ரூபாய் மேல் செலவு செய்துள்ளனர். தற்போது இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பறவைகளும் சில வன உயிரினங்களும் உள்ளன. 25 வகையான மரக்கன்றுகள் உள்ளன.
இந்த சமூகக்காடு இங்கு வளர்ந்தால் மண் அரிப்பைத் தடுக்கும் மேலும் ஊருக்குள் தண்ணீர் வராமல் செய்யும். அதனால் அரசாங்கத்தின் உதவியுடன் 100 நாட்கள் பணியாளர்களின் உழைப்பில் இந்த குறுங்காட்டை பராமரித்து வருகிறோம். ஒரு அடர்ந்த குறுங்காட்டை உருவாக்கி அதை வனத்துறையிடம் முதலமைச்சரின் கரங்களால் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகாரிகள் வேறு பகுதியில் ஆற்றின் கரையை வலுப்படுத்துவதற்காக இங்குள்ள ஆற்று மணல்களை அள்ளி சென்று வருகின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. தமிழக முதல்வர் ஐயா இதனை உடனே தலையிட்டு காட்டை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை காப்பாற்ற கருணை காட்டுங்கள் ஐயா.
- G. ஸ்ரீகாந்த்
உள்ளி பஞ்சாயத்து, குடியாத்தம்.
+91 72000 17771