ஸ்பாவில் நடந்த பாலியல் தொழில்! 4 பெண்கள் மீட்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
ayurvedic-massage-center
ayurvedic-massage-center

சென்னை அடையாறு பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்த நிலையில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார் 4 பெண்களை கைது செய்தனர்.

மசாஜ் சென்டர், ஸ்பா என்ற போர்வையில் பாலியல் தொழில் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இதுபோன்று சென்னையில் அழகிகளும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அடையாறு பகுதியில் காமராஜர் அவென்யூ, 2வது தெருவில் உள்ள ஸ்பா ரிலாக்ஸாவில் பாலியல் தொழில் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பா ரிலாக்ஸாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அடையாறு போலீஸார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

ramesh
ramesh

அதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து 4 பெண்களை போலீஸார் மீட்டனர்.

மேலும் அவர்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர். பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்பாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி தங்களை ரமேஷ் ஏமாற்றியதாக தெரிவித்தனர்.

மேலும் தங்களின் ஏழ்மையை சாதகமாக பயன்படுத்தி அவர் இந்த நிலைக்கு கொண்டு வந்ததாக கூறினர். இதனையடுத்து பெண்கள் நால்வரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.