மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sonia gandhi - 2026

சோனியா காந்திக்கு லேசான உடல்நிலை கோளாறு. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

காங்கிரஸ் கட்சித் தேசிய தலைவர் சோனியா காந்தி லேசான உடல்நிலை கோளாறுக்கு ஆளானார். அதனால் அவரை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அவரோடு கூட ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உள்ளார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லேசான உடல்நிலை கோளாறுக்கு ஆளானார். அதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. காய்ச்சல், மூச்சுவிடுதல் சம்பந்தமான தொல்லைகளால் அவர் மருத்துவமனைக்கு சேர்ந்து உள்ளதாக தெரிகிறது. சோனியா காந்திக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.

ஆனால் சாதாரண மருத்துவ பரிசோதனைகளின் பாகமாகவே சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்ந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 7 மணிக்கு அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். ராகுல்காந்தி பிரியங்கா காந்தி வாட்ரா கூட அங்கே இருக்கிறார்கள். சோனியா காந்தியின் வயது 73.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு சர்விகல் கான்சர் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் அவர் அவ்வப்போது ஹெல்த் செக்கப் செய்துகொள்வார். இப்போதுகூட ரெகுலர் ஹெல்த் செக்கப்புக்காகவே அவரை மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது.

சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்ற செய்தி அறிந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 15 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.