அடுத்தது ‘திஷா’: என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்டவரின் மனைவியிடம் கதை கேட்ட ராம்கோபால் வர்மா!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
ramgopalvarma int - 2026

திஷா பாலியல் வன்கொடுமை செய்த சென்னகேசவலுவின் மனைவியை சந்தித்தார் திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் ராம் கோபால் வர்மா தன் புதிய ப்ராஜெக்ட் பற்றி நேற்று அறிவித்தார்.

தெலுங்கு மாநிலங்களில் பரபரப்பு ஏற்படுத்திய திசா பாலியல் வன் கொலை ஆதாரமாக சினிமாவை எடுக்கப் போவதாக அறிவித்தார். விவாதங்களுக்குப் பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒருவழியாக சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய டாப்பிக்கை தேர்ந்தெடுத்து திரைப்படம் தயாரிக்க உள்ளார்.

தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய திசா சம்பவம் பற்றி சினிமாவை திரைக்கு எடுத்து வரப் போவதாக தெரிவித்தார்.

சில மாதங்கள் முன்பு தெலங்காணாவைச் சேர்ந்த வெட்னரி டாக்டர் திசாவை நான்கு தீயவர்கள் மாயப் பேச்சுக்கள் பேசி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு தகனம் செய்தார்கள். அதன்பின் தெலங்காணா போலீசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததோடு உண்மைக் கதை சுபமாக முடிந்தது.

இப்போது அதே டாபிக்கோடு வர்மா திசா என்ற திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் பின்னணியில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலுவின் மனைவி ரேணுகாவை வர்மா இன்று சந்தித்தார். அவரை தன் ஆபீசுக்கு வரவழைத்து முக்கியமான விஷயங்களை கேட்டு அறிந்து கொண்டாராம்.

“பாலியல் வன்கொடுமையாளனின் மனைவியை இன்று சந்தித்தேன். 16 வயதிலேயே ரேணுகா சென்னகேசவலுவை மணந்தாள். 17 வயதிலேயே ஒரு குழந்தையை பெறப் போகிறாள். திசாவை மட்டுமே அல்ல. அந்த அரக்கன் ரேணுகாவை கூட மோசம் செய்துள்ளான். ரேணுகா சிறுமி. அப்படிப்பட்ட அவள் விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாகப் போகிறாள். இவர்கள் இருவருக்குமே எதிர்காலம் இல்லை” என்ற ஆத்திரப்பட்டார்.

திசா சினிமா பற்றி வர்மா ட்வீட் செய்துள்ளார். என் அடுத்த சினிமா பெயர் திஷா. திஷா பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இந்த சினிமா இருக்கப்போகிறது. நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு பிறகு அதை விட கொடுமையாக ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்து உள்ளார்கள். கடந்த காலத்தில் நடந்த பாலியல் வன் கொடுமைகளில் இருந்து புதிதாக வந்துள்ள ரேபிஸ்டுகள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை இந்த சினிமாவில் பயங்கரமான படிப்பினையாக கூறப்போகிறேன்.

நிர்பயாவை ரேப் செய்து சாலையில் வீசிவிட்டு அவர்கள் ஓடிப் போனார்கள். அவ்வாறு செய்தால் தண்டனை விழாது என்று நினைத்தார்கள். ஆனால் போலீசார் பிடித்து விட்டார்கள். அப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது என்று இவர்கள் திசாவை எரித்துக் கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்தார் வர்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.