“இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் யுத்தம்; தலைமை தாங்குவது திமுக.,”: ஹெச்.ராஜா காட்டம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
hraja - 2026

இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது; அதற்கு திமுக., தலைமை தாங்குகிறது. தி.மு.க.தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி என்று காட்டத்துடன் விமர்சித்தார் பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா!

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு எதிர்ப் பகுதியில் நீலிக்கோனாம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட நேற்று வந்த பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது… வரதராஜபுரம் மேட்டில் 60 ஆண்டாக இருந்த கனகர் அப்புச்சி கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். அங்கு இருந்த சிலை, கோயில் பெயர்ப் பலகை ஆகியவற்றை அகற்றியது கண்டிக்கத்தக்கது. அடுத்த 30 நாட்களுக்குள் கோவில் முன்னர் எப்படி இருந்தததோ அதே போன்று இருக்க வேண்டும்…

கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டும் முயற்சி நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கே சென்றும் பார்வையிட்டேன். கோயில் நிலத்தை கையகப்படுத்தி கட்டடம் கட்ட முயற்சித்தால் பெரும் போராட்டம் நடக்கும்.

திமுக., தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி. இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது. தி.மு.க. முஸ்லிம் லீக்காக மாறிக் கொண்டுள்ளது. இந்து மதத்தின் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை யாரேனும் கொச்சைப் படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் … என்று எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.