தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
பத்தாவது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது முறை இவர் நிதி அமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பட்ஜெட் தாள்கள் அடங்கிய பெட்டியில் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது.