பட்ஜெட்: மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடியும், கல்வித்துறைக்கு 34,841 கோடியும் ஒதுக்கீடு!

Published:

ops 1 1 - 2026

தமிழகத்தில் 2020 – 2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்! தமிழகத்தில் சுமார் 21,000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி ரூபாய்கள் உள்ளன.

சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி ரூபாய். மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாயும், கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் மேலும் சுமார் 59,000 கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டம். 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு! அதே சமயம் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img