வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளை உயா்த்தவும், கடன் அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை, அதிமுக அரசு தாக்கல் செய்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா் ஓ.பன்னீா்செல்வம்.
தமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தலைமைச் செயலகம் புறப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ், சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.