செவ்வாயில் இருந்தாலும் இந்திய தூதரகம் உங்களை காப்பாற்றும் சுஷ்மாவின் அந்த சிறப்பான ட்வீட் இது! இது இப்போது வைரலாகி வருகிறது.
நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் என்று சுஷ்மா சுவராஜ் கடந்த 2017 ஜூன் 7-ஆம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.
சுஷ்மா சுவராஜ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் 67 வயதில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். கடந்த மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது டிவிட்டர் பதிவுகளிலேயே பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உடனடியாக கொடுத்தவர்!
வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு சென்ற இந்தியர்கள் படும் சிரமங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகார் செய்த வுடனேயே, அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்த மிக எளிமையான பெண்மணி என்று பெயர் எடுத்தவர். அவரது டிவிட்டர் பதிவுகளின் மூலமே பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் இந்தியர்கள் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பெண்மணியாக சுஷ்மா ஸ்வராஜ் கடந்த காலத்தில் விளங்கினார்!
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு உதவத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று அதிரடியாக செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜை கிண்டலடிக்கும் விதமாக 2017ல் ஒரு டிவிட்டர் பயனாளர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ஒரு ட்விட் செய்திருந்தார்!
அதில் நான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டது!
மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் அளித்த பதிலை கேட்டு டிவிட்டர் உலகமே கொண்டாடியது.
நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் – என்று அவர் பதிவிட்டு இருந்தார்!
தற்போது சுஷ்மா ஸ்வராஜ் காலமான நிலையில் அவரது இந்த டிவிட்டர் பதிவை பலரும் மீண்டும் எடுத்து பதிவு செய்து தங்களது அனுதாபத்தையும் அவரது உதவும் மனப்பான்மையும் குறிப்பிட்டு வருகின்றனர்!
Even if you are stuck on the Mars, Indian Embassy there will help you. https://t.co/Smg1oXKZXD
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 8, 2017




