சுஷ்மா சுவராஜ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் இவர் 67 வயதில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்!
சுஷ்மா சுவராஜ் கடந்த வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
1999-2004ஆம் காலகட்டத்தில் அவர் சுகாதாரத்துறையில் அமைச்சராக பணியாற்றிய போது பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருந்தார்! மருத்துவ சிகிச்சைகள் குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தினார்.
குறிப்பாக 2003 செப்டம்பர் 29 இல் கேரளாவுக்கு சென்றிருந்த சுஷ்மா ஸ்வராஜ் அங்கே ஹெச்ஐவி.,யினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவரைக் கட்டியணைத்து எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்!
எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கக் கூடாது என்றும் தொடுவதாலோ கட்டியணைப்பதாலோ ஹெச்.ஐ.வி.,யின் தாக்கம் பரவாது என்பது குறித்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது செயல் அப்போது பெரும் பாராட்டைப் பெற்றது!
கேரளத்தில் பென்சி என்ற சிறுமியையும், பென்சன் சாண்டி என்ற சிறுவனையும் அவர் கட்டியணைத்தபடி விழிப்பு உணர்வு ஊட்டிய புகைப்படம் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று!
ஏழை எளியவர்களுக்கு அதிகம் உதவி புரியும் எளிமையான மத்திய அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் அப்போது எல்லோராலும் புகழப்பட்டார்!



