ஓய்வு பெறும் வயது: பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சற்றுமுன் தமிழகம்
court-1
court-1

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி, தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை எனவும், அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்து விளக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.