நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றம் வளாகத்தில் விவசாயிகளுக்கு நீதி வழங்க கோரி காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் வெளியே திரண்ட காங்கிரசார் தங்கள் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்தும், விவசாயிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி காந்தி சிலை அருகே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



