ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அணை வற்றும்போது விவசாயிகள் இலவசமான வண்டல் மண் எடுக்கலாம். சத்துணவு திட்டத்துக்கு முட்டை வாங்கியதில் முறைகேடு இல்லை.
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது. காவிரி பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை. அ.தி.மு.க எம்பிக்கள் தான் அதற்காக 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடைபெறவிடாமல் செய்தனர். அப்போது நமக்கு யாரும் ஆதரவு தரவில்லை என கூறினார்



