ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அப்துல் கலாம் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் நாட்டின் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி பதவியை வகித்தவர்.
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் 2002ம் ஆண்டு 2007-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் இறந்த போது நாடே சோகத்தில் ஆழ்ந்தது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலின் கோபுர மண்டபத்தில் அப்துல் கலாம் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



