கொரோனா… மகத்தான சேவைப் பணியில் சேவாபாரதி தொண்டர்கள்!

அடடே... அப்படியா? கோவை சென்னை லைஃப் ஸ்டைல்
sevabharathi work1
sevabharathi work1

சேலம் மாநகராட்சி சார்பாக அமைக்கப்படவுள்ள கொரோனா தற்காலிக முகாம்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளின் வேண்டுகோளின்படி 250 கட்டில், மெத்தை மற்றும் தலையணைகள் வழங்குவதாக சேவாபாரதி தமிழ்நாடு மூலம் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

sevabharathi selam
sevabharathi selam

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 40 கட்டில், மெத்தை மற்றும் தலையணைகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் வடதமிழ்நாடு தலைவர் குமாரசுவாமி, சேலம் மாவட்டத் தலைவர் சோழா பில்டர் செந்தில் மற்றும் சமூக ஆர்வலர் சுபாஷ் ANS ஆனந்த் முன்னிலையில் கமிஷனர் அவர்களிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ளவை கட்டில், மெத்தை, தலையணைகள் விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

sevabharathi work3
sevabharathi work3

சேவாபாரதி தமிழ்நாடு வடபழனி மாவட்டம் சார்பாக விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் தினமும் சராசரி 200 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

sevabharathi work4
sevabharathi work4

கடந்த 15 நாட்களாக நடைபெறும் இந்த முகாமில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, தடுப்பூசி போடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை 20க்கும் மேற்பட்ட சேவாபாரதி பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

sevabharathi chart2
sevabharathi chart2

சென்னை பெரம்பூர் மாவட்டம் சார்பாக அயனாவரம் ESI மருத்துவமனையில் இன்று மூன்றாவது நாளாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாலையில் சுண்டல், தேனீர் ஆகியவை வழங்கப்பட்டன. நேற்று வழங்கிய பொருட்களை அந்த மருத்துவமனையின் உணவு பொறுப்பாளர் டாக்டர் மகேஸ்வரி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.