தேவையான போது உடனே செய்யலாம் தெவையம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
thevaiyam-1
thevaiyam-1

தெவையம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – இரண்டு கப்
பெரிய வெங்காயம் – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
சமையல் எண்ணெய் – 6 மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்கு ஊறியதும் லேசாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவும். (தோசை மாவு பதத்தில் இருக்கலாம்).

பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறி வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை எடுத்து ஊற்றி, உப்பு போட்டு நன்கு கிளறவும்.

கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் உதிரி உதிரியாக வரும்.

அதனுடன் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மேலும் சிறிது நேரம் கிளறினால் ஜவ்வரிசி போல சிறு உருண்டைகளாக பிரிந்து வரும்.

இப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சூடான, சுவையான தெவையம் தயார்.

சீக்கிரம் அடிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறு தீயில் வைத்துக் கிளறவும். சிறு உருண்டைகளாகும் வரை கரண்டியால் நன்கு அழுத்திக் கிளறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.