ஆரோக்கிய சமையல்: சோயா சப்பாத்தி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
soya-sapathi-1
soya-sapathi-1

சோயா சப்பாத்தி
தேவையான பொருட்கள்
சப்பாத்தி மாவு – 2 கப்
பால் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 5
சோயா – ஒரு கப்
பச்சைமிளகாய் – 4
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
சோயாவை சுடு தண்ணிரீல் போட்டு வேக வைத்து தனியா எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதனுடன் பச்சைமிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ரொம்ப நைஸாக அரைக்கக் கூடாது.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு, வதங்கிய உடன் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மஞ்சள் தூள், காரம் தேவைப்பட்டால் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்

சப்பாத்தி மாவு பிசையும் போது இந்த கலவையையும் போட்டு பிசைய வேண்டும்.

மாவை சப்பாத்தியாக போட்டு கல்லில் போட்டு எடுக்கவும்.

மிகவும் சத்தான அதே சமயம் டேஸ்டியான சப்பாத்தி. வீட்டில் பெரியவர் முதல், குழந்தைகள் வரை விரும்பும் உணவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.