யாருமற்ற சூழலில்.. மயானம் வரை… ஒற்றை ஆளாய் ஓடிவந்து உதவியவர்!

Published:

tamildhana
tamildhana

இரண்டு தினங்களுக்கு முன் என் நெருங்கிய உறவினரான தம்பி தனது அப்பா அம்மா இருவரையும் உடல்நிலை சரியில்லாமல் திண்டுக்கல் கவெர்மென்ட் ஹாஸ்பிடலில் சேர்க்கிறார் மறுநாள் காலை அம்மா உயிரோடு போராடிகொண்டிருக்கையில் அப்பா இறந்து விடுகிறார் எங்களுக்கு செய்தி கிடைத்து நாங்கள் வெளியூரில் இருந்து செல்ல தாமதமாகிவிட்டது

ஒரு பக்கம் அம்மா உயிருக்கு போராடிகொண்டிருக்கிறார் மறுபக்கம் அப்பாவின் உடல் தகனம் செய்ய வேண்டும் என்ன செய்வதென்று மனம் குழம்பி தவித்துக் கொண்டிருக்கயில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் யாராவது உதவி கேட்டால் சொல்லுங்கள் என்று ஒருவர் நம்பர் கொடுத்துள்ளார் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று நம்பர் கொடுத்துள்ளார் அவரிடம் போன் செய்து தனது நிலைமையை கூறியுள்ளார் தம்பி, விவரத்தை கேட்ட அந்த நபர் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கூறியதுடன் நான் உடனே வருகிறேன் என்று கூறி உடனே மின்மயானதிற்கு போன் செய்து பதிவு செய்து விட்டு உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்துள்ளார்,

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அங்கு சென்று மருத்துவமனை ஊழியர்களுடன் பேசி இறந்தவரின் உடலை வாங்குவதற்க்கான விவரங்களை கொடுத்து அனைத்து ஏற்படுகளையும் செய்து விட்டு மின்மயானம் சென்று அங்கு அவர்களுக்கு தேவையான விவரங்களை கொடுத்து ஆம்ப்லனஸ்க்கு ஏற்பாடு செய்து இறந்தவரின் உடலை
மின்மயானம் கொண்டுசெல்ல மாலை 6.30 ஆகிவிட்டது( இதற்க்கிடையில் காலை 11 மணியில் இருந்து 6.30மணி வரை அவர் சாப்பிட கூட இல்லை ).

இறந்தவரின் உடலை மின்தகனத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேலையில் மீண்டும் அதிர்ச்சி செய்தி ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிகொண்டிருந்த அம்மாவும் உயிர் பிரிந்தார் நாங்கள் என்ன செய்வதென்று தவிக்கும் வேலையில் இருவரையும் ஒன்றாக தகனம் செய்வோம் என்று மகனின் ஆசையை உணர்ந்து மயான ஊழியர்களிடம் பேசி இறந்தவரின் உடல் தகனத்தை தாமதிக்க செய்து மீண்டும் ஹாஸ்பிடல் சென்று அந்த அம்மாவின் உடலையும் நீண்ட போராட்டத்திற்கு பின் பெற்று அவரது உடலையும் தகனத்திற்கு ஏற்பாடு செய்யும் போது மணி இரவு 11,

இது வரை யார் என்று முகம் கூட பார்க்காமல் தன்னலமற்று சேவை செய்த அந்த மாமனிதருக்கு எத்துணை கோடி நன்றிகள் கூறினாலும் போதாது..

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இதே போல் அவர் தினசரி சேவை செய்து கொண்டுள்ளார் நாங்கள் மின் மாயணத்தில் வெளியே நிற்கும்பொழுது இதற்க்கு முன் தகனம் செய்தவர்களின் உறவினர்கள் நன்றியோடு கைக்கூப்பி சென்றனர் அதை காணும் பொழுது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது..

அந்த மாமனிதர் RSS வளர்ப்பில் வந்த பிஜேபி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்அணி தலைவர் தமிழ்வாணன் (செல் நம்பர் 90666 60360)

Related articles

Recent articles

spot_img