விஜயகாந்துக்கு மூச்சுத் திணறல்! மருத்துவமனையில் அனுமதி!

சற்றுமுன் சென்னை
vijayakanth vote
vijayakanth vote

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால், அதிகாலை 3.30க்கு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், உடல்நலக் குறைவால், சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்தே, விஜயகாந்த் வீட்டிலேயே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பது இல்லை.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையின் போது, அவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றிருந்தார்.

தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலில், காரில் இருந்தபடி, கையசைத்து மட்டும் அவர் பிரசாரம் செய்திருந்தார். எதுவும் பேசவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.