
அவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.
அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவனையில் கடந்த 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து அவரது மருமகள் ஐஸ்வா்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி, அவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.
அமிதாப் பச்சனும் அவரது குடும்பத்தினரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவா்களின் ரசிகா்கள் பிராா்த்தனை செய்தனா். இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் ‘நெகடிவ்’ என வந்து அமிதாப் பச்சன் பூரண குணமடைந்துவிட்டதாகவும், அவா் விரைவில் வீடு திரும்ப இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமிதாப் பச்சன், அதுதொடா்பான தொலைக்காட்சி செய்தியை இணைத்து, ‘இந்தச் செய்தி போலியானது; பொறுப்பற்றது; திருத்தமுடியாத பொய்’ என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
.. this news is incorrect , irresponsible , fake and an incorrigible LIE !! https://t.co/uI2xIjMsUU
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020
.. this news is incorrect , irresponsible , fake and an incorrigible LIE !! https://t.co/uI2xIjMsUU
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020



