என்னை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார் சாய் பல்லவி. இதில் இவர் பேசியது : நான் ஒரு நடிகையாக சினிமா துறையில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு பெரிய ஹீரோயினாக ஆகி சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கிடையாது. என்னை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள். நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் ஒரு முறைக்கு பல முறை யோசித்து பார்த்து தான் முடிவு எடுகிறேன்.
எந்த நிலையிலும் கண்டிப்பாக அரைகுறை உடை அணிந்து நடிக்க மாட்டேன். என்னால் அரைகுறை ஆடையில் நடிக்க முடியாது. 20 வருடங்களுக்கு பிறகு எனது குழந்தைகள் நான் நடித்த படங்களை பார்த்தாலும் அதை பார்த்து சந்தோஷப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். மேலும் எனது அப்பா, அம்மா, சிநேகிதிகள் என் படத்தை பார்த்தாலும் பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில்தான் நடிக்க சம்மதிக்கிறேன் என கூறினார் நடிகை சாய் பல்லவி.



