சுஷாந்தின் அடுத்த படத்தை அவருடைய காதலியான ரியா சக்ரபோர்தியை வைத்து எடுப்பதாக திட்டமிட்டிருந்தார்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புக்கின் மரணம் குறித்து மும்பை போலீஸ் இதுவரை 41 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் ஐந்து பேர், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து இருந்தனர். மேலும் அவரிடம் பாலிவுட் பாகுபாடு காட்டியது எனக் கூறியிருந்தனர். அவர் சாரா அலி கானுடன் நடித்திருந்த கேதார்நாத் மற்றும் க்ரித்தி சேனனுடன் நடித்திருந்த ராப்தா போன்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டபோது அவர் புறக்கணிக்கப்பட்டதை பல வீடியோக்களில் காணமுடிந்தது.

இதுகுறித்து கதையாசிரியரும் இயக்குநருமான ருமி ஜெஃப்ரியை போலீசார் விசாரித்தனர். சுஷாந்தின் அடுத்த படத்தை அவருடைய காதலியான ரியா சக்ரபோர்தியை வைத்து எடுப்பதாக திட்டமிட்டிருந்தார். ஜெஃப்ரி ஜூன் 12ஆம் தேதி சுஷாந்துடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். மற்றொரு நடிகர் மூலமாகத்தான் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார் என தெரிந்துகொண்டதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார்



