கர்நாடக ஸ்பெஷல்: கோடுபள்ளி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
modi palli
modi palli

கோடுபள்ளி

தேவையானவை:

மைதா மாவு, அரிசி மாவு, ரவை – தலா ஒரு கப்
தேங்காய் துருவல் – கால் கப்
சீரகம், பெருங்காயத்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவு, அரிசி மாவு, ரவை ஆகியவற்றுடன் தேங்காய் துருவல், சீரகம், உப்பு, மிளகாய்த்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும், பின்னர் கலந்த மாவை சிறிதளவு எடுத்து விரல் போல உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு துண்டின் இரண்டு முனைகளையும் இணைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால்… கோடுபள்ளி (அ) விரல் முறுக்கு தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.