தலைமுறை தலைமுறையாக வரும் தலைவலிகளும் உண்டு. இதைத் தவிர உணவின் காரணமாகவும், குளிர் பானங்கள் காரணமாகவும் 30% ஒற்றை தலைவலிகள் ஏற்படுகின்றன.
தலைவலி வர பிற காரணங்களாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தூங்கும் முறை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை குறிப்பிடலாம்.
தலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இந்த தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடித்துவிட வேண்டாம். .
தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.
மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.
நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.
சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான்.
ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
டார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறதாம்.
குல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.
சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, டைராமைன்’ (Tyramine) சத்து அதிகம் உள்ள உணவுப்பொருளான சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ வகைகள்,
எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்’ (Mono Sodium Glutamate) என்ற சுவையூட்டப்பட்டி சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக இயற்கையான சர்க்கரை உள்ளது. ஏனெனில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் தங்களுடைய அனைத்து சக்திகளையும் சாக்கரையாகவே இரசாயன வகையில் சேகரித்து வைக்கின்றன.
அனைத்து வகையான இயற்கை சர்க்கரையும் ஒரு கிராமுக்கு நான்கு கலோரி என்று ஒரே அளவு சக்தியைத் தருகின்றன. செயற்கை இனிப்புகளை விட இயற்கையாக கிடைக்கும் சர்க்கரையே ஆரோக்கியமானது.
செயற்கையாக செய்யப்படும் இனிப்புகள் சிலருக்கு ஒவ்வாமல் இருப்பதால் தலைவலி ஏற்படுகின்றது. எனினும் சுக்ரலோஸ் பயன்படுத்தி செய்யும் இனிப்புகளை விட, ஆஸ்பார்டேம் என்ற மூலப்பொருளை பயன்படுத்தி செய்ப்படும் இனிப்புகளை சாப்பிடுவதால் தலைவலி வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
ஆதலால் உணவு காரணமாக தான் உங்களுக்கு அடிக்கடி தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருகிறது என நீங்கள் சந்தேகப்பட்டால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.