கர்நாடக ஸ்பெஷல்: புளிப்பு உப்பு கார தோசை!

Published:

Kara dosai
Kara dosai

புளிப்பு – உப்பு கார தோசை

தேவையானவை:

பச்சரிசி – ஒரு ஆழாக்கு
குண்டு உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 50 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு, தனியா, வெந்தயம்,

காய்ந்த மிளகாய் சேர்த்து ஊறவிடவும் (இரவு செய்யும் தோசைக்கு காலையிலே ஊற வைக்க வேண்டும்). புளியை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பொருட்களுடன் புளியின் சாறைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை புளிக்கவிடத் தேவையில்லை. தோசை வார்க்கும் முன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img