ஆரோக்கிய சமையல்: அகத்தி பூ பொரியல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
akathi poo 2
akathi poo 2

அகத்தி பூ உருவத்தில் சற்று பெரியது, பூவின் நடுவில் வாளைப்பூவில் ‘கள்ளன்’ இருப்பது போல அகத்திப் பூவிலும் கெட்டியான நார் போன்ற ஒரு நரம்பு இருக்கும் அதை நீக்க வேண்டும்.

பிறகு பூக்களை பொடிப் பொடியாக வெட்டி தண்ணீரில் அலசி சுத்தமாக நீரை வடித்து எடுங்கள்,இப்போது அகத்திப்பூ பொரியல் செய்ய நீங்கள் தயார்.

தேவையான பொருட்கள்

பொடிப்பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம்,ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய்கள் சில
சீரகம் ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
கடலை எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
தேங்காய் துருவல் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கரிவேப்பிலை,. சிறிது.

ஒரு பொரிக்கும் சட்டியை அடுப்பிலேற்றி அது சூடானதும் எண்ணெய் விடுங்கள், எண்ணெய் சூடானதும் கடலைப் பருப்புகளைப் போட்டு கருகாமல் அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து முடித்ததும், கடுகு உளுந்து , கரிவேப்பிலை சேருங்கள்.

கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப்போட்டு விட்டு, பொடியாக வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போடுங்கள், இப்போது பொரியலுக்குத் தேவையான உப்பைச் சேர்த்து வதக்குங்கள்.

akathi pu poriyal
akathi pu poriyal

வெங்காயம் பாதி வெந்த பிறகு வெட்டி.வைத்து இருக்கும் அகத்திப் பூக்களை அள்ளிப்போட்டு வதக்குங்கள் பூவென்பதால், ஐந்தே நிமிடத்தில் வதங்கிவிடும். அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விட்டு பரிமாறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.