பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
dhilip kumar
dhilip kumar

பிரபல நடிகர் திலீப் குமார் திடீர் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். இந்த தகவலை அவரது மனைவியம், மூத்த நடிகையுமான சாய்ரா பானு, தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக சுவாச பிரச்சனை இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். 98 வயதாகும் பழம்பெரும் நடிகர் திலீப் குமார், கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

dhilip saira
dhilip saira

கடந்த மாதம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சைரா பானு இந்த வருகை ஒரு வழக்கமான உடல் பரிசோதனைக்கானது என தெரிவித்திருந்தார்.

தற்போது மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு, திலீப் குமார் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் இவரது உடல் நிலை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் திலீப் குமார் பிரபல தமிழ் நடிகை சாயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.