
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியை சார்ந்தவர் சந்தீப் மவுர்யா. இவர் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக சந்தீப்பின் அத்தை மகள் ஊருக்கு வருகையில், இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சந்தீப் மவுர்யா அத்தை மகளான சிறுமியுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளான். இதனையடுத்து, இராணுவத்தில் பணி கிடைத்ததும், அத்தை மகளை திருமணம் செய்து வைக்க சந்தீப்பின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், மகனுக்கு மற்றொரு பெண்ணை வரனாக பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கவே, சிறுமி தனது குடும்பத்தினர் மற்றும் வாத்திய குழுவுடன் அத்தை மகனான காதலனின் வீட்டிற்கு சென்று நூதன முறையில் திருமணம் செய்யக்கூறி போராட்டம் நடத்தினர்.

இதனால் ஊரே சந்தீப்பின் வீட்டுக்கு முன்னிலையில் திரண்ட நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளாத பட்சத்தில் தற்கொலை செய்வேன் என்றும் சிறுமி தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், திருமணம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, சிறுமின் வீட்டார் தங்களின் வீட்டிற்கு சென்றனர்.
மேலும், சிறுமியிடம் பாலியல் ரீதியாக இராணுவ வீரர் அத்துமீறியுள்ளதால், அவரின் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.