திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை தொடர்கிறது!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
23 June26 Thiruvannamalai giri
23 June26 Thiruvannamalai girivalam file picture

திருவண்ணாமலை அருணாசல மலை பௌர்ணமி கிரிவலத்துக்கு இந்த மாதமும் தடை தொடர்கிறது.

ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில்… ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை ஏராளமானோர் கிரிவலம் வருவர். கொரோனா தொற்று பரவலால் 2020 மார்ச் முதல் தொடர்ந்து ஊரடங்கு சில தளர்வுகளோடு அமலில் உள்ளது.

இம்மாதம் 24ஆம் தேதி காலை 3:10 முதல் 25ஆம் தேதி பகல் 12:55 வரை ஆனி மாத பௌர்ணமி திதி வருகிறது. தற்போது 28ஆம் தேதி காலை 6:00 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அப்போது கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு வர வேண்டாம்… என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.