மகன் சடலமாக தண்ணீர் தொட்டியில்..! தாய் காதலனுடன் கட்டிலில்..!

Published:

boy - 2026

8 வயது சிறுவன் குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததால் காவல்துறையினர் அவருடைய தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலிருக்கும் டெக்சாஸ்சிலுள்ள ஒரு ஹோட்டலில் 8 வயது சிறுவனும், அவருடைய தாயும் தங்கியுள்ளார்கள். தாயினுடைய காதலனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து 8 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 8 வயது சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இதனையடுத்து காவல்துறையினர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த 8 வயது சிறுவனின் தாயான kailaa மற்றும் அவருடைய காதலனான Dominique என்பவரையும் கைது செய்துள்ளார்கள்.

boy1 - 2026

இதற்கிடையே சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுவனினுடைய பற்கள் உடைக்கப்பட்டிருப்பதும், அவனுடைய காலில் பலமுறை அடைக்கப்பட்டு சித்திரவதை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்நிலையில் காவல்துறையினர் 8 வயது சிறுவனின் தாயிடமும், அவருடைய காதலனிடமும் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 8 வயது சிறுவனை அவருடைய தாய் குளிப்பதற்காக அனுப்பி வைத்துவிட்டு இருவரும் தனியறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து குளியலறைக்கு சென்று பார்த்தால் 8 வயது சிறுவன் இறந்து கிடந்ததாக இருவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.

Related articles

Recent articles

spot_img