எந்த மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் அவசியம் தெரியுமா?!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
marriage 2 1
marriage 2 1

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஏற்கனவே மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருந்தன.

வகை ஒன்றில், 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் வகை 1இல் உள்ளன.

வகை 2-ல் 23 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை ,சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் வகை 2ல் பிரிக்கப்பட்டுள்ளன.

வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன

திருமணங்களுக்கான பயண அனுமதி என, வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் இப்பதிவு இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

வகை 1ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 1ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து (https://eregister.tnega.org) இணைய வழியாக மணமகன் அல்லது மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் தரப்பில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

வகை 1ல் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 2,3ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ பாஸ் பெறவேண்டும்.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.