கோயிலைத் திறக்கக் கோரி இந்து முன்னணி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
thiruparankundram hindu munnani - 2026

திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் இந்து முன்னணி சார்பாக கோவில்களை திறக்க கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகளில் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் கோவில்கள் திருப்பதிக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படாத நிலையில், இந்து முன்னணி சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் வாசலில் கோயில்களை திறக்கக்கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாஸ்மாக் கடைகளைத் திறந்த அரசு கோவில்களை திறக்க வேண்டும் என 20க்கும் மேற்பட்டோர் மண்டியிட்டு கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.