
அகத்திக்கீரையில் மொத்தம் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் குறிபிடப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்தும், 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 3.1 சதவிகிதம் தாது உப்புகள் மற்றும் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.
இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது.
இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது. வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும்.
பொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. ரத்த சோகையை நீக்கு கிறது. பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.
அகத்தி இப்பணியை செவ்வனே செய்கிறது. நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுது ணையாக இருக்கும்.
களைப்பு, சதைவலி, மரமரப்பு, அசதி போன்ற குறைபாடுகள் பாஸ்பரஸ் குறைப்பாடுகளினால் ஒரு நாளைக்கு 1200 கி தேவைப்படும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு நல்ல தீர்வு.
அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.
பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும்.
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு, அதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி நீங்கும்.
அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
அகத்திக் கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.
இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.
ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.
அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை நிவாரணம் கிடைக்கும்.
அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும்.
அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகளவு நிறைந்து உள்ளது. பால் சுரப்பு அதிகம் இல்லாத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.
அகத்தி கீரை வயிற்றுப் புண் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.
உடலில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.
அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும். அகத்திகீரையானது மருந்துகளின் வீரியத்தை குறைக்கும் சக்தி கொண்டது. அகத்திகீரையை சாப்பிடும்போது எந்த மருந்தையும் எடுத்துகொள்ள கூடாது.
ஏனெனில் மருந்துகளின் சக்தியானது அகத்திகீரையின் முன் செயலிழந்து விடும். ஆகவே, மருந்துகள் சாப்பிடும்போது இதை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. மேலும் இந்தக் கீரையை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாகச் செயல்படவேண்டிய அகத்தியானது அதற்கு எதிராகச் செயல்பட்டு உடலில் சொறி, சிரங்கை ஏற்படுத்திவிடும்.
அதே போல அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டு இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். வாயு கோளாறு உள்ளவர்கள் மற்றும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது.
அகத்தி கீரை இரும்பு சத்து நிறைந்ததோடு மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு சாப்பிடாதோருக்கு, அதற்கு இணையான ஆண்மைக்கு பலமளிக்கும் சத்துக்களையும் கொடுக்கிறது. இதில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவேதான் விரதம் இருந்த மறுநாள் இந்த கீரையை சாப்பிடும்படி பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.