திருப்பதி பெருமாளை தரிசித்த நமிதா!

இந்தியா சினிமா
namitha - 2026

திருப்பதியில் நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என குற்றம் சாட்டி உள்ளார்

நடிகை நமீதா அவ்வப்போது தனது கணவருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் நேற்று கணவருடன் சென்று அவர் பி தரிசனம் செய்தார். அதன்பின் அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் லட்டு பிரசாதங்கள் கொடுத்தனர் என்பதும் அதேபோல் வேத மந்திரங்களை ஓதி வேத பண்டிதர்கள் நமிதா மற்றும் அவரது கணவரை ஆசி வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த நமிதா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போதுதான் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கடந்த முறை வந்தபோது சிறப்பாக இருந்தது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்

நமீதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகிய இருவரும் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.