சென்னை: தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்திரை இன்று காலை காஞ்சிபுரத்தில் தொடங்கியது.
இன்று காலை காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இதனைத் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் பாஜக., மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கலந்து கொண்டார். தமிழக பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.
வரும் அக்.11 முதல் 22 வரை தாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒரு முறை நதியில் வரும் மகாபுஷ்கரம் எனும் சடங்கு நிகழ இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கப் படி, குரு பெயர்ச்சியை முன்னிட்டு இந்த விழா பன்னிரண்டு நாட்களுக்கு நடைபெறும்!




