சபரிமலை தீர்ப்பு .. கேரளாவில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதில் பல அரசியல் சுவாரசியங்கள் உண்டு.
தமிழக ஜல்லிக்கட்டு போன்ற மக்கள் எழுச்சி இது என்று பேசுகிறார்கள்.
மக்கள் எழுச்சி என்பதெல்லாம்.. தன்னாலே நடப்பதில்லை. நேரெதிர் நிலையில் இருக்கும் பல அரசியலும், அவரவர் நோக்கத்திற்காக இணைந்து வலு சேர்க்கும் போது .. மக்கள் எழுச்சி என்பதாக உருவமெடுக்க அனுமதிக்கப்படுகிறது. அவ்வளவுதான்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னணியில் நேரெதிர் நிலையில் இருக்கும் பல அரசியல்களும் கூட இணைந்திருந்தது போலவே…
சபரிமலை தீர்ப்பு குறித்து ..பிற மத அடிப்படைவாத அரசியல்கள்.. அவரவருக்கு ஏற்படப் போகும் நஷ்டத்தை கணக்கில் கொண்டு எச்சரிக்கை அடைவதாலும், இந்த வாக்கு வங்கியை கணக்கில் கொண்ட கட்சிகள் போராட்டங்களுக்கு எதிராக அடக்கி வாசிப்பதாலும் ..
பெரும் மக்கள் எழுச்சியாக உருவமெடுக்க ‘அனுமதிக்கப் படுகிறது’.
‘மத சார்பற்ற கட்சிகள்’ தீர்ப்பை ‘ஆதரித்தால்’..அடிப்படைவாத நிறுவன மதங்களுக்கும் இது நடக்கலாம் என்கிற நிலையில்.. குறிப்பிட்ட வாக்கு வங்கி அடிவாங்கும்.
‘மத சார்பற்ற கட்சிகள்’ தீர்ப்பை ‘எதிர்த்தால்’ … மத அடிப்படைவாத பட்டமும், ஆண்-பெண் சமத்துவத்தை எதிர்க்கிற பிற்போக்கு பட்டமும் கிடைக்கும்.
நிறுவன வாக்கு வங்கி அரசியலும், போலி மத சார்பின்மை கட்சிகளும்..
தீர்ப்பை & போராட்டத்தை முழுமையாக எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல்.. சிக்கிக் கொண்ட நிலை.
முள்ளை முள்ளால் எடுக்கும் ஐயப்பன்!
– எழுத்தாளர் பானு.கோம்ஸ்




