November 9, 2024, 2:15 AM
26.9 C
Chennai

ஓரம்போ… ஓரம்போ… ஜோதிமணி வண்டி வருது!

ஓரம்போ ஓரம்போ அக்கா எம்பி ஜோதிமணி வண்டி வருது…! என்று கூவிக் கொண்டு சைக்கிள் பேரணி நடந்தது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற அனுமதி இல்லாத சைக்கிள் பேரணியில் காங்கிரஸ் எம்பி., ஜோதிமணி ஓட்டிய சைக்கிளை பிடித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் ஆங்காங்கே பல்வேறு கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு முறை பெட்ரோல் பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்றும், கரூர் RMS தபால் நிலையம் முன்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷ்டிப் பூசல் நிறைந்த காங்கிரஸ் கமிட்டியில், கரூரை அடுத்த தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் காங்கிரஸ் கமிட்டி கரூர் மாவட்ட முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான சுப்பிரமணியம் தலைமையில் ஒரு புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், மற்றொருபுறம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ALSO READ:  துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்!

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். அதில் சமூக இடைவெளி இல்லாமல் நோய்த்தொற்று பரப்பும் விதமாகவே ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனைக் கண்டும் காணாதது போல் போலீசார் இருந்தனர். மேலும் அனுமதி இல்லாத சைக்கிள் பேரணி தொடங்கியது. இது குறித்தெல்லாம் கரூர் மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளவில்லை.

இதில் பெயருக்காக தான் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஓர் இளைஞர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னே ஓடி வர, சைக்கிளை ஓட்டிவந்தார் ஜோதிமணி.

அப்போது, அக்கா வராங்க, ஓரம்போ என்ற பாணியில் சினிமா பாடலில் வரும் காட்சி… ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, என்பது போல் ஓரம்போ ஓரம்போ கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வண்டி வருது என கரூர் நகரில் காங்கிரஸ் எம்பி., வலம் வந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நோய் பரப்பும் விதமாக ஒரே இடத்தில் சுமார் 50 நபர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருசேர சைக்கிள் பேரணி சென்றது இங்குள்ள பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

ALSO READ:  செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!
author avatar
ஆனந்தகுமார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் – 08.11.2024

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் –08.11.2024இந்திய...

பஞ்சாங்கம் நவ.09 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு!

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மின் பகிர்மான கழகத்தில் வேலை!

ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற இணையதளம் ஆன்லைன் மூலம் வரும் 6 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.