கனவின் விளைவு: நீளமான கூந்தலுடைய பெண்ணைக் கண்டால்…!

அடடே... அப்படியா? நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream
dream

நகச்சுற்றை கனவில் கண்டால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

நகைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்பட்டு வறுமை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நகரா (இசைக்கருவி) சத்தத்தை கேட்பது போல் கனவு கண்டால், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

நடனம் ஆடும் மங்கையை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.

நண்டை கனவில் கண்டால் கடன்களால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நட்சத்திரத்தை பிரகாசமாக கனவில் கண்டால் புத்திரபேறு உண்டாவதைக் குறிக்கிறது.

நரியை கனவில் கண்டால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.

நவதானியங்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

நாகதாளி(சப்பாத்திக்கள்ளி) அழிவதாகக் கனவில் கண்டால் பகைவர்களின் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கும்.

நாகம் விரைந்து செல்வதாக கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நாடியில் (நரம்பு) ரத்தம் வருவது போல் கனவு கண்டால் நஷ்டம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நாட்டியக் கச்சேரியில் பங்கேற்பது போல் கனவு கண்டால் சேமிப்பு மேலும் உயரும் என்பதைக் குறிக்கிறது.

நாடோடியைக் கனவில் கண்டால் எதிர்பாராத சங்கடங்கள் உருவாகும்.

நிச்சய தாம்பூலத்தை கனவில் கண்டால் திருமணத்திற்கு வரன் அமையும் என்பதைக் குறிக்கும்.

நிலமகள் (பூமிதேவி) படத்தை கண்டால் வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கிறது.

நிறைகுடத்தை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நீளமாக தொங்கும் கரிய குழல்(கூந்தல்) கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.

நெய்யைக் கனவில் கண்டால் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கி ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

நோய் ஏற்பட்டு உடல் வருந்துவதாகக் கனவு கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.