ராகி ரிப்பன் பக்கோடா
தேவையான பொருட்கள்:
ராகி மாவு (கேழ்வரகு மாவு),
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா 200 கிராம்,
எள் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
மாவு வகைகள் அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைப் பிழிந்தெடுக்கவும். சத்தான, சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.