கனவின் விளைவு: கழுகின் வரவு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1
dream-1

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகால் தாக்கப்படுவது போல கண்டால் நீங்கள் செய்து வரக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் இலக்கை அடைய பெரும் சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

ஒரு கழுகை பார்த்து நீங்கள் பயப்படுவது போல உங்களுடைய கனவில் கண்டால் வரும் காலங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு கழுகு மேல் நோக்கி பறந்து செல்வதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் லட்சியத்தை அடைய முன்னேறி செல்வீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு கழுகு உங்களுடைய தலையில் வந்து இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

ஒரு கூட்டில் கழுகுகள் இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.

egle
egle

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகை பிடிப்பது போல கண்டால் உங்களுடைய தொழிலில் விரைவில் ஒரு சில தோல்விகள் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

ஒரு கழுகை நீங்கள் கொல்வது போல கனவு கண்டால் உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளில் இருக்கக்கூடிய இலக்குகளை அடைவதற்கு யாராலும் உங்களை தடுக்க முடியாது என்பதை குறிக்கிறது. நீங்கள் உங்களுடைய எல்லா எதிரிகளையும் தோற்கடித்து மிகப்பெரிய செல்வத்தை அடைவீர்கள்.

வேறொருவர் கழுகை கொல்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் ஒரு சில பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டங்கள் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

கழுகு சாப்பிடுவதுபோல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு வரக்கூடிய எந்தவிதமான சவாலான போராட்டங்களிலும் போராடி மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள் என்பதை குறிக்கிறது.

கழுகு வானத்தில் வட்டமடிப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்கக் கூடிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

கழுகு ஒரு புறாவை பிடிப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் கவலை அடைய கூடிய ஒரு சில சம்பவங்கள் நடைபெற போகிறது என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் கழுகின் சிறகுகளை பார்ப்பதுபோல கண்டால் உங்களுடைய மிகப்பெரிய ஆசை விரைவில் நிறைவேறும் என்பதை குறிக்கிறது.

கர்ப்பமாக இருப்பவர்கள் கழுகை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.